திரும்பி வந்துட்டேனு சொல்லு - மாவட்ட செயலாளர்களுக்கு விஜயகாந்த் அழைப்பு!

சென்னையில் விரைவில் தேமுதிக மாவட்ட செயலாளார்கள் கூட்டம் நடைபெறுவுள்ளதாக அக்கட்சியின் தலைமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தேமுதிக மாவட்ட செயலாளர்களை நேரில் அழைத்து ஆலோசனை நடத்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார்

. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தேர்தல் முடிந்தவுடன் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தலைமை கழகத்தின் நடத்துவதாக இருந்தது, ஆனால் ஊரடங்கு காரணமாக ஆலோசனை கூட்டம் நடத்த முடியவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும், வெகுவிரைவில் ஊரடங்கு காலம் முடிந்தவுடன் அனைத்து மாவட்ட செயலாளர்களை தலைமைக் கழகத்திற்கு நேரில் அழைத்து ஆலோசனை நடத்த இருக்கிறோம் என்றும் இதில் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, தேர்தல் முடிந்த இந்த நேரத்தில், இனி வரும் காலங்களில் தேமுதிகவை எப்படி வழி நடத்தி செல்ல வேண்டும் என்பதை நாம் அனைவரும் கலந்து ஆலோசித்து ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்றும் வரும் காலத்தில் தேமுதிக மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல நாம் அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். 

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்