விஜயகாந்தின் உடல் நிலை சீராக இல்ல - மருத்துவமனை அறிக்கை..!!
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் உடல் நிலை சீராக இல்லை என மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த் உடல்நிலை
நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் னால கோளாறால் அவதிப்பட்டு வருகின்றார். இதன் காரணமாக நேரடி அரசியல் இருந்து சற்று ஒதுங்கி இருந்து வரும் நிலையிலும், அண்மையில் தனது பிறந்தநாள் அன்று அவர் தொண்டர்களை சந்தித்தார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த நவம்பர் 18ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார் மார்புச் சளி, இடைவிடாத இருமல் காரணமாக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உடல்நிலை சீராக இல்லை
விஜயகாந்திற்கு ஏற்கனவே பல்வேறு உடல் உபாதைகள் இருப்பதன் காரணமாக உடல்நிலை மற்றும் உறுப்புகளின் செயல்பாட்டை துல்லியமாக கண்காணிப்பதற்காக ஐசியூவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில், விஜயகாந்தின் உடல் நிலை நல்ல முன்னேற்றம் காணப்பட்ட போதும், கடந்த 24 மணி நேரத்தில், அவருக்கு நுரையிரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது.அவர் விரைவில் பூரண உடல் நலம் பெறுவார் என நம்புகிறோம் என்றும் அடுத்த 14 நாட்கள் அவருக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.