மதுபாட்டிலில் தற்கொலை செய்து கொண்ட சிறுமியின் புகைப்படத்தை ஒட்டுங்கள் - விஜயகாந்த் வலியுறுத்தல்
தந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்து கொண்ட சிறுமி விஷ்ணு பிரியாவின் புகைப்படத்தை ஒட்டுங்கள் என்று அரசை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
மதுப்பாட்டிலில் சிறுமியின் போட்டோவை போடுங்கள்
இது குறித்து இவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடாமல், ஒவ்வொரு மதுபாட்டில் மீது ரூ.10 கூடுதலாக விற்பது குறித்தும் கேள்வி எழுப்பும் செய்தியாளர்களை பார்த்து நீங்கள் குடிக்கிறீர்களா என தமிழக அமைச்சர்கள் பொறுப்பில்லாமல் பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுபாட்டில்களில் மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்ற வாசகத்தின் கீழ், தந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்து கொண்ட சிறுமி விஷ்ணு பிரியாவின் புகைப்படத்தை ஒட்டி அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் அனைத்து டாஸ்மாக் கடைகள் முன்ப சிறுமியின் புகைப்படத்தை வைக்க வேண்டும். அந்த புகைப்படத்தை பார்த்தாவது ஒவ்வொரு தந்தையும் மது குடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan