யாரும் வதந்தி பரப்ப வேண்டாம்.. என் கணவர் உடல்நிலை நன்றாக உள்ளது - பிரேமலதா விஜயகாந்த்
75-வது சுதந்திர தினம்
கடந்த 15ம் தேதி நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. அன்று நாடு முழுவதும் உள்ள இந்தியர்கள் தங்களுடைய வீடுகளில் மூவர்ணக்கொடியை ஏற்றி 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடினர்.
உலக மக்கள் சமூகவலைத்தளங்களில் சுதந்திர தின விழா வாழ்த்துக்களை பதிவிட்டனர். இந்திய அரசியல் தலைவர்கள் தங்களுடைய அலுவலகங்களுக்கு சென்று இந்திய தேசிய கொடி ஏற்றி, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.
தேசிய கொடி ஏற்றிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவகத்திற்கு வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், தேசிய கொடியை ஏற்ற வண்டியில் தன் மனைவி பிரேமலதாவோடு வந்தார். அப்போது, தொண்டர்கள் மத்தியில் மனைவி பிரேமலதா உதவி செய்ய விஜயகாந்த் தேசிய கொடியை ஏற்றினார். அப்போது, தொண்டர்கள் அவரைப் பார்த்து உற்சாகமாக ‘தலைவா’ என்று கூச்சல் போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தொண்டர்கள் கவலை
தொண்டர்களை பார்த்து எப்போதும் உற்சாகத்தோடு கையசைத்து, கம்பீரமாக பேசும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஏதும் பேசாமல், அமைதியாக வண்டியில் உட்கார்ந்து சென்றது தொண்டர்கள் மத்தியில் கவலையை கொடுத்தது. இப்படி ஏதும் பேசாமல் சென்றதால் தலைவர் விஜயகாந்த்திற்கு என்ன ஆச்சு? ஏதாவது உடல்நிலை சரியில்லையா? என்று பலர் கேள்வி எழுப்பினர்.
யாரும் வதந்தி பரப்ப வேண்டாம்
நாளை தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது 69வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.
இந்நிலையில், இது குறித்து நடிகரும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளது. யாரும் வதந்தி பரப்ப வேண்டாம். என் கணவர் விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி, தொண்டர்கள் நாளை நேரில் வந்து அவரை சந்திக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.