72 குண்டுகள் முழங்க - விடைபெற்றார் கேப்டன் விஜயகாந்த்..!

Vijayakanth
By Karthick Dec 29, 2023 12:43 PM GMT
Report

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை செயலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

விஜயகாந்த்

தமிழ் மக்களால் கேப்டன் என கொண்டாடப்பட்ட தன்னிகரற்ற மாமனிதராக வாழ்ந்து வந்தவர் விஜயகாந்த். சில காலமாகவே உடல்நல பாதிப்பால் தவித்து வந்த அவர், நேற்று காலமான செய்தி தமிழ்நாட்டிற்கே பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

vijayakanth-last-riots-done-in-koyambdu

நேற்று முதல் லட்சகணக்கான பொதுமக்கள், திரைத்துறை, அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் அவருக்கு தங்களது அஞ்சலியை செலுத்தினார். எதிர்க்கட்சி தலைவராக வேகமாக ஓடிய விஜயகாந்த், உடல் நல பாதிப்பால் தேமுதிக வீழ்ச்சியை கண்டபோதிலும் தமிழக அரசியலில் விஜயகாந்தின் தடம் அளப்பரியது.

vijayakanth-last-riots-done-in-koyambdu

சென்னை தீவுத்திடலில் துவங்கிய அவரின் இறுதிஅஞ்சலி சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தேமுதிக தலைமை செயலகம் வந்து முடிய, 72 குண்டுகள் முழங்க விஜயகாந்தின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.  

vijayakanth last rites done

நேரில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், எம்.பி டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்ரமணியன், தங்கம் தென்னரசு, கே.என்.நேரு மற்றும் அதிமுக ஜெயக்குமார் போன்ற தமிழக முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு தங்களது கடைசி அஞ்சலியை செலுத்தினர்.