சட்டசபையில் நாக்கை கடித்தது ஏன்..? ஜெயலலிதா- விஜயகாந்த் மோதல் விவகாரம்..?

Vijayakanth J Jayalalithaa J Jayalalithaa Vijayakanth Tamil nadu
By Karthick Dec 28, 2023 07:03 AM GMT
Report

எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கும் ஜெயலலிதாவிற்கு எதனால் மோதல் ஏற்பட்டது என்பதை குறித்து தற்போது காணலாம்.

மோதல்

2011- ஆம் ஆண்டு தேர்தல். கூட்டணி அமைத்த அதிமுக - தேமுதிக அமோக வெற்றியை பதிவு செய்தது. 150 இடங்களை கைப்பற்றிய அதிமுக ஆட்சியமைக்க 29 இடங்களை வெற்றி பெற்ற தேமுதிக பிரதான எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் இடம்பெற்றது.

vijayakanth-jayalalitha-fight-in-assembly

கூட்டணி கட்சி என்றபோதிலும், ஆட்சி அமைந்த சில மாத காலத்திலேயே இருகட்சிக்கும் மோதல் போக்கு உண்டானது. ஆனால் பெரும் பிரச்சனைக்கு வித்திட்டது சங்கரன்கோயில் இடைதேர்தல்.

விஜயகாந்த் - ராதிகா Love story ..? திருமணம் வரை சென்றதை நிறுத்திய நண்பர்..?

விஜயகாந்த் - ராதிகா Love story ..? திருமணம் வரை சென்றதை நிறுத்திய நண்பர்..?

சட்டமன்றத்தில் விலையுயர்வை குறித்து கேள்வி எழுப்பிய தேமுதிகவின் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே ஏன் விலை உயர்வை அறிவிக்கைவில்லையென கேள்வி எழுப்பினார்.

நாக்கை கடித்த..

அதற்கு பதிலளித்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சங்கரன்கோயில் சட்டமன்ற தேர்தல் வருகிறது, இந்த தேர்தலில் அதிமுக தனித்து நின்று வெற்றி பெறும் என்று கூறி, தேர்தலில் தனித்து போட்டியிட உங்களுக்கு திராணி உள்ளதா.? என ஆவேசமாக தேமுதிகவினரை பார்த்து வினவினார்.

vijayakanth-jayalalitha-fight-in-assembly

இதற்கு சட்டென பதிலளித்த விஜயகாந்த் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி எவ்வாறு வெற்றி பெரும் என்பது தெரியும் என்று கூற ஆளும் அதிமுகவினர் பெரும் கூச்சலிட இருதரப்பிற்கும் சட்டமன்றத்தில் பிரச்சனை எழுந்தது.

அப்போது தான் ஆவேசமடைந்த விஜயகாந்த் நாக்கை துருத்தி ஆவேசமாக பேசினார். ஆனால், அந்த நிகழ்விற்கு பிறகு தான்,தேமுதிகவின் இறங்கு முகம் என ஜெயலலிதா தெரிவிக்க தற்போது அக்கட்சி இறங்குமுகத்தையே சந்திக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.