விஜயகாந்தின் உடல்நிலை; என்னால் அழாமல் பதில் சொல்ல முடியுமா என தெரியவில்லை - பிரேமலதா விஜயகாந்த்
விஜயகாந்தின் உடல் நிலை குறித்த கேள்விக்கு தன்னால் அழாமல் பதில் சொல்ல முடியுமா? என தெரியவில்லை என அவரது மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.
அம்மா பாசம் அவருக்கு தெரியாது
தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த பிரேமலதா, ஒரு வயது இருக்கும் போதே விஜயகாந்தின் அம்மா உயிரிழந்துவிட்டார். அவருக்கு அம்மா பாசம் என்றால் என்னவென்றே தெரியாது.
என்னை திருமணம் செய்து கொண்டவுடன் அவர் சொன்ன முதல் வார்த்தை எனக்கு அம்மா இல்லை, நீதான் எனக்கு அம்மாவாக இருந்து என்னை பார்த்து கொள்ள வேண்டாம் என்று கூறினார்.

இதுவரை நான் அவருக்கு மனைவியாக மட்டுமின்றி ஒரு தாயாகவும் அவரை நான் பார்த்து கொள்கிறேன். படப்பிடிப்பின் போது அவருக்கு பல காயங்கள் ஏற்பட்டது.
காயங்கள் ஏற்பட்டாலும் அவர் அதை பொருட்படுத்தாமல் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படக்கூடாது என்பதற்காக அவர் படப்பிடிப்பை ரத்து செய்ததாக வரலாறு இல்லை.
அவரது உடல்நிலை குறித்த கேள்வியை கேட்கும் போதெல்லாம் என்னால் அழாமல் பதில் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை .
கண்ணீர் வடித்தார்
திரையுலகினர்களுக்கும் பொதுமக்களுக்கும் கணக்கில்லாத நன்மைகள் செய்த ஒருத்தருக்கு கடவுள் இப்படி ஒரு சோதனையை ஏன் கொடுத்தார் என்று தெரியவில்லை.

திரையுலகில் உள்ளவர்களுக்கு சாப்பாடு போட வேண்டும், உதவி செய்ய வேண்டுமென்று எடுத்துகொண்டால் அதற்கு முதல் எடுத்துக்காட்டு கேப்டன் விஜயகாந்த் மட்டுமே.
அவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது நம் அனைவருக்குமே மிகுந்த சோகம் தான். நாட்டின் 75வது சுதந்திர தினத்தில் தொண்டர்களை சந்திக்க விரும்பினார்.
விருப்பத்தின் பேரில் அவரை தலைமைக் கழகம் அழைத்து வந்தோம்.
தேசிய கொடியை ஏற்றி விட்டு அவர் ஆனந்த கண்ணீர் வடித்த  போது எங்கள் கண்ணிலும் கண்ணீர் வந்தது என்று பிரேமலதா உருக்கமாக பேசியுள்ளார்.  
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    