விஜயகாந்த் உடல்நிலை மோசமா? விஜயபிரபாகரன் பரபரப்பு விளக்கம்

Vijayakanth Tamil nadu DMDK
By Karthick Aug 24, 2023 06:03 AM GMT
Report

நாளை நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்தின் பிறந்தநாள் கொண்டப்படவுள்ள நிலையில், அவரது உடல்நிலை குறித்து மகன் விஜயபிரபாகரன் விளக்கமளித்துள்ளார்.

கேப்டன் விஜயகாந்த் 

தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட நடிகர் விஜயகாந்த் 2005-ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை நிறுவினார். விஜயகாந்தின் உடல்நிலை நிலை மோசமாவதற்கு முன்பு தமிழகத்தில் முக்கிய கட்சியாக தேமுதிக திகழ்ந்த நிலையில், அவரின் உடல்நிலை பாதிக்கப்படவே தேர்தல் அரசியலில் கட்சி பின்தங்கியது.

vijayakanth-health-is-bad-vijayaprabhakaran-speech

2011-ஆம் ஆண்டில் அதிமுகாவுடனான கூட்டணியில் சட்டமன்றத்தில் 29 உறுப்பினர்களுடன் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தார். தற்போது கட்சியும், தொண்டர்களும் துவண்டு போகியிருக்கும் நிலையில், மீண்டும் விஜயகாந்த் எப்போது புத்துயிர் பெற்று வருவார் என்ற எதிர்பார்ப்பு சாமானிய மக்கள் பலரிடமும் தொடர்ந்து நீடித்து கொண்டே தான் வருகின்றது.

விஜயபிரபாகரன் பேட்டி ?  

இந்நிலையில், சில நாட்கள் முன்பு விஜயகாந்தின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாக தகவல்கள் வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், விஜயகாந்தின் உடல் நலம் பின்னடைவு தான் என குறிப்பிட்டு, ஆனால் கேப்டன் விஜயகாந்த் 100 வருடம் நன்றாக இருப்பார் என தெரிவித்தார். 

vijayakanth-health-is-bad-vijayaprabhakaran-speech

பழையபடி பேசுவதற்கும் எழுந்து வருவதற்குமான முயற்சிகளை செய்து வருகிறோம் என கூறியவிஜய பிரபாகரன், மக்களை போலவே தாங்களும் நம்புகிறோம் என கூறி, தற்போதைக்கு விஜயகாந்த் நலமாக தான் இருக்கிறார்”என தெரிவித்ததாக கருத்துக்கள் வைரலானகின.  இந்த கருத்துக்கள் வைரலான நிலையில், அது குறித்து விஜயபிரபாகரன் விளக்கமளித்துள்ளார்.

விஜயபிரபாகரன் விளக்கம்

இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், கேப்டன் உடல்நிலை நன்றாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது தயவு செய்து வதந்திகளை நம்ப வேண்டாம்... வழக்கம் போல் ஊடகங்கள் தவறான தலைப்பில் சித்தரிக்கிறது என்றும் இணைப்பை திறந்து நான் பேசியதை பாருங்கள் அப்போது புரியும் நன்றி என தெரிவித்துள்ளார். கட்சியினர் ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் வழக்கம் போல் ஆகஸ்ட் 25ஆம் தேதி கேப்டன் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் பிரமாண்டமாகக் கொண்டாடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.