விஜயகாந்த்தின் உடல்நலத்துடன் அரசியல் அப்டேட் குறித்த மகன் - மகிழ்ச்சியில் தொண்டர்கள்

dmdk vijayakanth vijayprabhakar
By Petchi Avudaiappan Sep 02, 2021 10:01 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

 தேமுதிக தலைவர் விஜயகாந்த் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக அவரின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் மீண்டும் சில தினங்களுக்கு முன்பு துபாய் வழியாக அமெரிக்கா சென்றார்.

விமானநிலையத்துக்கு ஜெர்கின் அணிந்தபடி முகக்கவசத்துடன் வீல்சேரில் அழைத்து வரப்பட்ட விஜயகாந்தின் புகைப்படம் இணையத்தில் வைரலானது.இதனிடையே மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள தேமுதிக நிர்வாகி இல்ல திருமண விழா நேற்று நடைபெற்றது.

இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் அரசின் முடிவை வரவேற்கிறோம்.

திமுக ஆட்சி பற்றி விமர்சனம் செய்ய 6 மாதங்களாவது முடிந்திருக்க வேண்டும். இதுவரை திமுக ஆட்சியின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாக கூறினார். மேலும் விஜயகாந்த் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். தமிழகம் திரும்பியதும் உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக போட்டியிடுவதற்கான முடிவை அவர் அறிவிப்பார் என்றும் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.