தேமுதிக விருப்ப மனு: விஜய்காந்த், பிரேமலதா எங்கே போட்டியிடுகின்றனர்?

india election tamilnadu vijayakanth
By Jon Feb 25, 2021 06:29 PM GMT
Report

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தேமுதிக விருப்ப மனு பெற்று வரும் வகையில் விஜயகாந்த் குடும்பத்தினர் பெயரும் விருப்ப மனுவில் இடம்பெற்றுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரங்களை தேமுதிக தொடங்கியிருந்தாலும் இன்னமும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் முடிவுகள் எட்டப்படவில்லை.

முன்னதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தேமுதிகவிற்கு சட்டமன்ற தேர்தலை தனித்து எதிர்கொள்ள வலு இருப்பதாக பேசி இருந்தார். மேலும் திமுக மற்றும் அதிமுக விரைந்து கூட்டணி பேச்சுவார்த்தைகளை தொடங்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று முதல் தேமுதிகவின் சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

இதில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட தேமுதிக தலைவர் விஜயகாந்த் பெயரில் தொண்டர்கள் விருப்ப மனு அளித்துள்ளனர். அதேபோல விருதாசலத்தில் பிரேமலதா விஜயகாந்தும், அம்பத்தூரில் விஜய பிரபகாரனும் போட்டியிட விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.