யோகிபாபுவிடம் குழந்தைப் போல் சிரித்த விஜயகாந்த் - வைரலாகும் வீடியோ
குழந்தைப் போல் சிரித்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் குழந்தைப் போல் சிரிக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள்
சமீபத்தில் நடிகர் விஜயகாந்த் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள், தொண்டர்கள், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தொண்டர்கள் மத்தியில் தோன்றிய விஜயகாந்த்
தன் பிறந்தநாளையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு தன் குடும்பத்தினருடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வந்தார். அப்போது, வீல் சேரில் வந்த விஜயகாந்த் தொண்டர்களை பார்த்து இரு கைகளை உயர்த்தி வணங்கினார்.
பின்னர், தொண்டர்கள் அனைவரையும் பார்த்து கையசைத்தார். மேலும், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை வாழ்த்த வந்தவர்கள் கொடுத்த பரிசுகளை பிரேமலதா விஜயகாந்த் வாங்கினார். சிறிது நேரம் கழித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அழைத்துச் சென்றனர்.

யோகிபாபுவிடம் குழந்தைப் போல் சிரித்த விஜயகாந்த்
இந்நிலையில், நகைச்சுவை நடிகர் யோகிபாபு தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், யோகிபாபு தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்துள்ளார். அப்போது, யோகிபாபுவிடம் விஜயகாந்த் குழந்தைப் போல் சிரித்துக் கொண்டு பேசியுள்ளார்.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் கேப்டன் சிரிப்பைப் பார்த்து எவ்வளவு நாளா ஆச்சு.. என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
— Yogi Babu (@iYogiBabu) November 2, 2022
மரண தண்டனையை இரத்து செய்ய அழுத்தம் ...! அனோஜன் மீது நடந்த தாக்குதல்: சிறைக்கு விரையும் தூதுவர் IBC Tamil
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil