கன்னத்தை தட்டிய ரஜினிகாந்த்... - குழந்தைப் போல் சிரித்த விஜயகாந்த்... - வைரலாகும் வீடியோ

Rajinikanth Vijayakanth Viral Video
By Nandhini Nov 19, 2022 10:15 AM GMT
Report

நடிகர் விஜயகாந்த் கன்னத்தை நடிகர் ரஜினிகாந்த் தட்டியபோது குழந்தைப் போல் சிரித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள்

சமீபத்தில் நடிகர் விஜயகாந்த் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள், தொண்டர்கள், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தொண்டர்கள் மத்தியில் தோன்றிய விஜயகாந்த்

தன் பிறந்தநாளையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு தன் குடும்பத்தினருடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வந்தார். அப்போது, வீல் சேரில் வந்த விஜயகாந்த் தொண்டர்களை பார்த்து இரு கைகளை உயர்த்தி வணங்கினார். பின்னர், தொண்டர்கள் அனைவரையும் பார்த்து கையசைத்தார்.

மேலும், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை வாழ்த்த வந்தவர்கள் கொடுத்த பரிசுகளை பிரேமலதா விஜயகாந்த் வாங்கினார். சிறிது நேரம் கழித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அழைத்துச் சென்றனர்.

vijay kanth- rajinikanth

குழந்தைப் போல் சிரித்த விஜயகாந்த்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சமீபத்தில் நடிகர் விஜயகாந்த் வீட்டிற்கு நேரில் சென்ற நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்தை சந்தித்துப் பேசினார்.

அப்போது, குடும்பத்தைச் சந்தித்து திரும்பும்போது, விஜயகாந்த் கன்னத்தை ரஜினிகாந்த் தொட்டு தட்டினார். அப்போது, விஜயகாந்த் ரஜினிகாந்த்தை பார்த்து ஒரு குழந்தைப் போல சிரித்தார்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்க்கும் ரசிகர்கள் என் தலைவனுக்கு இப்படி ஒரு நிலைமை வந்துவிட்டதே... மனசு வலிக்குது இவர் இப்படி பார்க்கும் போது... என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.