சர்ச்சையில் சிக்கும் மகன் - வருத்ததில் விஜயகாந்த் - நடந்தது என்ன?
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜயகாந்த்தால் தேமுதிக தொடங்கப்பட்டது. அப்போது, விஜயகாந்த் கட்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு இருந்தது. ஆனால், தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
இதனையடுத்து, அவர் அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பிய அவர், தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கி வீட்டிலேயே தங்கி ஓய்வெடுத்து வருகிறார்.
இதனால், தேமுதிகவின் அரசியல் நடவடிக்கைகளை அவரது மனைவியும், தேமுதிகவின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த், மைத்துனன் சுதீஷ், மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்டோரே கவனித்து வருகிறார்கள். ஆனால், விஜயகாந்த் ஆக்டிவாக இல்லாதது அக்கட்சியினரை வருத்ததில் ஆழ்த்தி இருக்கிறது.
நடிகர் விஜயகாந்துக்கு விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். இதில் சண்முக பாண்டியன் அப்பா வழியில் நடிகராகி விட்டார். மற்றொருவரான விஜய பிரபாகரன் அரசியலில் உள்ளனர். ஆனால், விஜயகாந்த் மரியாதையை சிதைக்கும் வகையில் பல்வேறு அரசியல் மேடைகளில் விஜய் பிரபாகரன் பேசுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
விஜய பிரபாகரன், பத்திரிகையாளர்களை தரக்குறைவாக கருத்துகளை கூறுவதாக கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது. தற்போது, கும்பகோணம் அருகே தேமுதிக நிர்வாகி இல்ல திருமண விழாவில் விஜய பிரபாகரன் கலந்து கொண்டார். அப்போது, தேமுதிகவுக்கு கூட்டமே வருவதில்லை. தேமுதிகவுக்கு கூட்டம் குறைவு. இப்படியெல்லாம் பேசுகிறவர்களின் கண்ணத்திலேயே அடியுங்கள் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருக்கிறார்.
விஜய பிரபாகரன் இவ்வாறு அடிக்கடி சர்ச்சையில் பேசி சிக்கிக் கொள்வது விஜயகாந்தை வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இதனால், விஜய பிரபாகரனை அழைத்து, 'இதுபோன்றெல்லாம் பொது வெளியில் பேசக் கூடாது; உனக்கு வயது ஆகிறது அரசியலில் முதிர்ச்சி வேண்டும்' என்று அறிவுரை வழங்கி இருக்கிறாராம்.