தொண்டர்களை மத்தியில் கம்பீரமாக இரு கைகளை உயர்த்தி வணங்கிய விஜயகாந்த்..!
இன்று தன்னுடைய 70வது பிறந்தநாளையொட்டி, தொண்டர்கள் மத்தியில் கம்பீரமாக இரு கைகளை உயர்த்தி வணங்கினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள்
நடிகர் விஜயகாந்த் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையடுத்து, பல அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள், தொண்டர்கள், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தொண்டர்கள் நடனம்
இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பெண் தொண்டர்கள் உற்சாகமாக நடனமாடி தலைவர் விஜயகாந்த்திற்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும், இனிப்புகளையும், கேக்குகளையும் கொடுத்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தொண்டர்கள் மத்தியில் தோன்றிய விஜயகாந்த்
இன்று தனது 70வது பிறந்தநாளையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு தன் குடும்பத்தினருடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வந்தார். அப்போது, வீல் சேரில் வந்த விஜயகாந்த் தொண்டர்களை பார்த்து இரு கைகளை உயர்த்தி வணங்கினார்.
பின்னர், தொண்டர்கள் அனைவரையும் பார்த்து கையசைத்தார். அப்போது தொண்டர்கள் தலைவா... கேப்டன்... என்று கத்தி கூச்சல் போட்டு வாழ்த்து தெரிவித்தனர். மேலும், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை வாழ்த்த வந்தவர்கள் கொடுத்த பரிசுகளை பிரேமலதா விஜயகாந்த் வாங்கினார். சிறிது நேரம் கழித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அழைத்துச் சென்றனர்.