தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் - உற்சாகமாக நடனமாடி பட்டைய கிளப்பிய பெண் தொண்டர்கள்...!

Vijayakanth Birthday DMDK
By Nandhini Aug 25, 2022 07:00 AM GMT
Report

இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி பெண் தொண்டர்கள் தேமுதிக தலைமை அலுவலகத்தில் உற்சாகமாக நடனமாடி பட்டைய கிளப்பியுள்ளனர். 

நடிகர் விஜயகாந்த் இளமை காலம்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள இராமானுசபுரம் என்ற கிராமத்தில் பிறந்தவர் நடிகர் விஜயகாந்த். சிறுவயது முதல் மதுரையில் வளர்ந்தார்.

சிறுவயதிலேயே சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் படிப்பில் ஆர்வம் இல்லாமல், தன் தந்தையின் அரிசி ஆலையில் சிறுசிறு பணிகளைச் செய்து வந்தார். விஜயகாந்தின் நிஜப்பெயர் நாராயணன்.

இது அவரது தாத்தாவின் பெயர். ஆனால், வீட்டில் இருப்பவர்கள் அவரை விஜயராஜ் என்று அழைத்தனர். சினிமாவில் நடிக்க வந்தப்போது அதை விஜயகாந்த் என்று மாற்றிக்கொண்டார்.

vijayakanth

தமிழ் சினிமா பயணம்

விஜயகாந்த் தமிழ் சினிமாவில் ‘இனிக்கும் இளமை ஹிட்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால், விஜயகாந்தின் அடுத்தடுத்தப் படங்கள் சரியாக ஹிட் கொடுக்கவில்லை.

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான ‘சட்டம் ஒரு இருட்டறை’ படம் விஜயகாந்த்திற்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதன் பின்னர், 1980களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

vijayakanth

குடும்பம்

நடிகர் விஜயகாந்த் 1990ம் ஆண்டு பிரேமலதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

அரசியல் பயணம்

கடந்த 2005ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை நடிகர் விஜயகாந்த் தொடங்கினார். இவர் கட்சியின் நிறுவனத் தலைவராகப் பொறுப்பேற்றார். 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள்

நடிகர் விஜயகாந்த் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையடுத்து, பல அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள், தொண்டர்கள், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொண்டர்கள் நடனம்

இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பெண் தொண்டர்கள் உற்சாகமாக நடனமாடி தலைவர் விஜயகாந்த்திற்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும், இனிப்புகளையும், கேக்குகளையும் கொடுத்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.       

vijayakanth

vijayakanth