மின் கட்டண உயர்வு கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு
மின் கட்டண உயர்வு, உணவுப் பொருட்கள் மீதான GST வரி உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியில் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
அரிசி, கோதுமை, தயிர் விலை உயர்வு
பாக்கெட்டில் அடைக்கப்பட்ட அரிசி, கோதுமை, தயிர் உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கான 5 விழுக்காடு ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்துள்ளது. இதனால், 25 கிலோ அரிசி மூட்டை 100 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். GSTவரி உயர்வை கண்டித்து தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம்
இந்த நிலையில் நேற்று, தேமுதிக தலைவர் விஜயகாந்த், அனைத்து பொருட்களின் விலை உயர்ந்து பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு GST வரி உயர்வு மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்காமல் மக்கள் வயிற்றில் அடிக்கும் மத்திய மாநில அரசுகளுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டு கண்டனத்தை தெரிவித்திருந்தார்.
கண்டன ஆர்ப்பாட்டம்
இந்நிலையில், வரும் 27ம் தேதி மின் கட்டண உயர்வு, உணவுப் பொருட்கள் மீதான GST வரி உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், மின் கட்டண உயர்வு, உணவுப் பொருட்கள் மீதான GST வரி உயர்வை கண்டித்து தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் ஆணைக்கிணங்க, தேமுதிக சார்பில் வருகின்ற 27ஆம் தேதி காலை 10 மணியளவில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
மின் கட்டண உயர்வு, உணவுப் பொருட்கள் மீதான GST வரி உயர்வை கண்டித்து தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் ஆணைக்கிணங்க, தேமுதிக சார்பில் வருகின்ற 27ஆம் தேதி காலை 10 மணியளவில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. pic.twitter.com/Y53Q8OaHlJ
— Vijayakant (@iVijayakant) July 21, 2022