விஜயகாந்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் தினகரன்- உருவாகுமா கூட்டணி?
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக திடீரென வெளிறியது. தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக கூட்டணியில் தொடர மாட்டோம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டார். தேமுதிகவின் விலகல் அதிமுக எதிர்பார்த்த ஒன்று தான்.
கூட்டணியில் இருந்த போதே பிரேமலதா விஜயகாந்த், தேர்தலில் தனித்து களம் காணுவோம் என்றெல்லாம் பேசியிருந்தார். இந்த நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து மீண்டும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
தேர்தலில் தனித்துப் போட்டியிட தேமுதிக தொண்டர்கள் விரும்பாததால் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தெரிகிறது.