தேமுதிக- அமமுக கூட்டணி உடன்பாடு? விரைவில் வெளியாகும் அறிவிப்பு
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்- தேசிய முற்போக்கு திராவிட கழகம் இடையே கூட்டணி உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக கூட்டணியில் இருந்து வந்த தேமுதிக நீண்ட இழுபறி பேச்சுவார்த்தைக்கு பின்னர் விலகியது.
இனிமேல் தேமுதிக-வுக்கு நல்ல காலம் தான், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என அக்கட்சியின் முக்கிய பிரபலங்கள் பேசி வந்தனர். இந்நிலையில் அமமுகவுடன் கூட்டணி அமைப்பதற்காக தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக கூறப்பட்டது.
50 தொகுதிகள் வேண்டும் என தேமுதிக சார்பில் கேட்கப்பட்டதாகவும் கூறப்பட்டது, இந்நிலையில் 32 தொகுதிகள் தேமுதிக-வுக்கு அமமுக ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்த முறையான அறிவிப்பு இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் வெளியாகலாம் என தெரிகிறது.