வலியோடு காயப்பட்ட உடலை காட்டிய அஜித்... - கண்கலங்கி அழுத விஜயகாந்த்... - வெளியான தகவல்...!

Ajith Kumar Vijayakanth Tamil Cinema
By Nandhini Feb 24, 2023 04:01 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜீத். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ‘தல’ என்று இவரை ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகிறார்கள்.

துணிவு

சமீபத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் அஜித்தின் ’துணிவு’ படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனையையும் படைத்துள்ளது.

அஜித்தின் AK62

துணிவு படத்திற்கு பிறகு, நடிகர் அஜித் அடுத்து விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் AK62 படத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் துவங்கப்பட இருந்த நிலையில், திடீரென AK62 படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இதனையடுத்து, AK62 படத்தை விஷ்ணு வர்தன் அல்லது மகிழ் திருமேனி போன்ற இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்கப்போவதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் என்னவென்றால், AK62 படத்தின் OTT உரிமையை NETFLIX நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக சொல்லப்படுகிறது.

vijayakanth-ajith-kumar-tamil-cinema

கண்கலங்கிய விஜயகாந்த்

அஜித் நடித்துக் கொண்டிருக்கும் ஆரம்ப காலத்தில், அவர் நடிக்கும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். ஆனால், ஒரு கட்டத்தில் அதையெல்லாம் நிறுத்திக்கொண்டார். அன்றிலிருந்து இன்று வரை தான் வேலை உண்டு என்று இருந்து வருகிறார்.

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் காயப்பட்ட அஜித் உடலைப் பார்த்து விஜயகாந்த் கண்கலங்கிய தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. ஒரு காலத்தில் நடிகர் விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்த போது நடிகர் சங்கத்தின் கடனை அடைப்பதற்காக மலேசியாவில் ஒரு கலை நிகழ்ச்சியை நடத்தினார்.

அந்த நிகழ்ச்சியில், அனைத்து நடிகர், நடிகைகளும் கலந்து கொண்டார்கள். ரஜினி, கமலும் உள்பட அனைவருமே கலந்து கொண்டனர். ஆனால், அஜித் மட்டும் அதில் கலந்துகொள்ளவில்லை.

இது விஜயகாந்திற்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்திவிட்டது. அந்த நிகழ்ச்சி முடிந்து சில நாட்கள் கழித்து விஜயகாந்தை நேரில் சந்திக்க வந்துள்ளார் அஜித். அப்போது, நடிகர் சங்கத்திற்காக ரூ.10 லட்சத்திற்கான காசோலையை விஜயகாந்திடம் கொடுத்துள்ளார் அஜித்.

அப்போது விஜயகாந்த் கோபமாக அந்த செக்கை வாங்கி தூக்கி எறிந்துவிட்டு, ‘எல்லா நடிகர்களும் வந்தார்கள். நீ ஏன் வரவில்லை?.. உன் பணம் எனக்கு தேவை கிடையாது என்று கத்தினாராம்.

ஆனால், அமைதியாக இருந்த அஜித், சார்... இங்க பாருங்க... என்று தன்னுடைய சட்டையை கழட்டி விஜயகாந்த்திடம் காட்டினாராம். அப்போது அஜித்... சார் நீங்கள் நினைப்பது போல் இல்லை சார். எனக்கு காயம் பட்டிருக்கிறது என்று சொன்னாராம்.

அந்த சமயத்தில் அஜித் பைக் ரேஸில் கலந்துகொண்டு கீழே விழுந்து முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்து. மேலும், அவர் பல முறை ரேஸில் கலந்து கொண்டு அடிபட்டதால் பல அறுவை சிகிச்சை தழும்புகள் அவர் உடலில் இருந்துள்ளது. அப்போது, அஜித்தின் உடலைப் பார்த்த விஜயகாந்த் கண்கலங்கி விட்டாராம்.   

தற்போது இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.