மீண்டும் மருத்துவமனையில் விஜயகாந்த்..!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேமுதிக அறிக்கை
இது தொடர்பாக தேமுதிக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் அவர்கள் 15 நாட்களுக்குப் பிறகு வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
— DMDK Party (@dmdkparty2005) December 26, 2023
பூரண நலத்துடன் இருக்கிறார். பரிசோதனை முடிந்து நாளை மறுநாள் வீடு திரும்புகிறார்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிர்ச்சி
உடல்நல பிரச்சினையினால் அண்மையில் தான் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பினார். வீடு திரும்பிய ஓரிரு வாரங்களிலேயே அவர் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது தொண்டர்களுக்கு அதிர்ச்சியையே கொடுத்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட விஜயகாந்த் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்தை நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.