திடீர் உடல்நலக்குறைவால் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி

vijayakanth admitedhoaspital
By Irumporai Aug 10, 2021 08:25 PM GMT
Report

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த்துக்கு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவராக உள்ள விஜயகாந்த் உடல்நலக்குறைவால் தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்தார் இந்தநிலையில் விஜயகாந்த் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவர் வழக்கமான சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளதாகவும், கேப்டன் உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் தேமுதிக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.  கடந்த மே மாதம் 19ஆம் தேதி நடிகர் விஜயகாந்துக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.