விஜய்க்காக காசே வாங்க'ல..! மனைவி கேட்டாங்க'னு சொத்த கொடுத்தேன்..! எஸ்.ஏ.சி உருக்கம்
இன்று விஜயகாந்த் மரணடைந்துள்ள நிலையில், அவரின் வாழ்க்கை குறித்த செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டே உள்ளன.
விஜய்க்கு உதவி
விஜய்யின் சினிமாவில் நடிக்க துவங்கிய காலகட்டத்தில் அவருக்கு பெரும் உதவியை செய்தவர் விஜயகாந்த். தந்தையின் படங்களால் உருவான விஜய் தோல்வியில் முடிய, எஸ்.ஏ.சி'க்கு கடன் பிரச்சனையை ஏற்பட்டுள்ளது.

அப்போது தான் விஜயகாந்திடம் விஜயுடன் ஒரு படம் நடித்து கொடுக்க அணுகிய சம்பவங்களை பேட்டி ஒன்றில் எஸ்.ஏ.சி கூறியுள்ளார். அந்த பேட்டியில், விஜயகாந்த்தை சந்திக்க வீட்டிற்கு சென்ற போது, விஜய்யின் இரண்டாம் படத்தில் நடிக்க உதவ வேண்டும் என கேட்டேன். அதற்கு உடனே பண்ணலாம் என்றும் எப்போது நடிக்கனும்-ன்னு கேட்டுக்கொண்டார்.
மனைவி கேட்டார்
அதன்பின் ஸ்க்ரிப் எழுதி ஒரு லட்சம் ரூபாய் அட்வான்ஸ் எடுத்துக்கொண்டு விஜயகாந்த் வீட்டிற்கு சென்றேன் என்ற எஸ்.ஏ.சி, அப்போது பணம் வாங்க விஜயகாந்த் மறுத்துவிட்டார் என்ற அவர், படமும் வெளியான பிறகு, விஜயகாந்த் வீட்டில் தான் வாங்கி வைத்திருந்த நிலத்தை பிரேமலதா கேட்க, படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றப்பின் அந்த நிலத்தை அவருக்கு தெரியாமல் விஜய்காந்த் மனைவி பிரேமலதாவிடம் ரிஜிஸ்டர் செய்து கொடுத்தேன் என்றார்.

அவ்வாறு எழுதி கொடுத்ததை விஜயகாந்த் கோபத்தில் என்னை கேவலப்படுத்திட்டீங்க என்று கத்தினார் என்று நினைவுகூர்ந்த எஸ்.ஏ.சி நான் சம்பாதித்தேன், நீங்க பெருந்தன்மையோடு இருந்ததுக்கு நான் செஞ்சிட்டேன் என்று கூறினேன் என்று விஜயகாந்த் தெரிவித்ததாக உருக்கமாக எஸ் ஏ சி கூறினார்.
பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்! Manithan