புத்தாண்டை முன்னிட்டு காட்சி கொடுத்த விஜயகாந்த் - உற்சாகத்தில் தொண்டர்கள் : வைரல் வீடியோ
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் அக்கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளை இன்று நேரில் சந்தித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருவதால் பொது நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்வது குறைந்துள்ளது. இதனிடையே நீண்ட நாட்களுக்குப் பிறகு புத்தாண்டை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வருகை புரிந்தார்.
அவருடன் மனைவி பிரேமலதா விஜயகாந்த், மகன் விஜய பிரபாகரன், மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் இருந்தனர். இதனைத் தொடர்ந்து புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க வந்த தொண்டர்களை நோக்கி விஜயகாந்த் கைகளை அசைத்து தனது வாழ்த்தை தெரிவித்துக்கொண்டார். தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் புத்தாண்டு தினத்தையொட்டி ரூபாய் நோட்டுக்களை பரிசாக வழங்கினார்.
இது தேமுதிக தொண்டர்கள், நிர்வாகிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.