நண்பர் விஜயகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
"நண்பர் விஜயகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
நீரிழிவு நோய் காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது கால் விரல் அகற்றப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், விஜயகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், " எனது அருமை நண்பர் கேப்டன் விஜயகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தேன்.
அவர் விரைவில் நலம்பெற்று, நல்ல உடல்நலத்துடன் இல்லம் திரும்ப விழைகிறேன்" என்று அந்தப் பதிவில் கூறியுள்ளார்.
எனது அருமை நண்பர் கேப்டன் @iVijayakant அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தேன். அவர் விரைவில் நலம்பெற்று, நல்ல உடல்நலத்துடன் இல்லம் திரும்ப விழைகிறேன்.
— M.K.Stalin (@mkstalin) June 21, 2022