தவெக-வில் இணைகிறார் விஜயதாரணி
பாஜக-வில் இருந்து விலகி தவெக-வில் இன்று இணைகிறார் விஜயதாரணி, இவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் எம்பிக்கள் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரள எல்லையில் அமைந்துள்ள விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு மூன்று முறை எம்எல்ஏ-வாக வென்றவர் விஜயதாரணி.
கடந்த பதவிக்காலம் முடியும் முன்பே பாஜகவில் இணைந்ததுடன் எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட டிடி பிரவீன் வெற்றி பெற்றார்.
மூன்றுமுறை எம்எல்ஏ-வாக இருந்த போதும் கட்சி மாறியதால் விஜயதாரணியின் செல்வாக்கு சரிந்தது, இந்நிலையில் தற்போது தவெக-வில் இணையவுள்ளார்.
பனையூர் அலுவலகம் வந்துள்ள விஜயதாரணி இன்னும் சற்று நேரத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் கடல் அலையை தாண்டி ஒலித்த மாணவர்களின் கால் சலங்கை ஓசை IBC Tamil
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan