நாடு முழுவதும் விஜயதசமி விழா கொண்டாட்டம் - பிரதமர் மோடி வாழ்த்து

Twitter Narendra Modi India Festival
By Nandhini Oct 05, 2022 04:45 AM GMT
Report

இன்று நாடு முழுவதும் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், விஜயதசமி விழாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விஜயதசமி விழா

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கிய விழாக்கள் ஒன்று நவராத்திரி விழா. இந்த விழா 9 நாட்கள் நடைபெறும். இவ்விழாவில், முதல் 3 நாட்கள் துர்க்கையையும், அடுத்த 3 நாட்கள் லட்சுமியையும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதியையும் வழிபாடு நடத்தப்படும். இறுதிநாளில் சரஸ்வதியை வழிபாடு செய்வதால், அந்த நாளை ‘சரஸ்வதி பூஜை’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

ஆயுதபூஜை பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனையடுத்து, இன்று விஜயதசமி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி வீடு, தொழிற்சாலை, அலுவலகம், கடை உள்ளிட்ட அனைத்து இடங்களில், இனிப்புகள் வைத்து பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இப்பண்டிகையையொட்டி, இனிப்பு கடைகளிலும், பூக்கடைகளிலும் வியாபாரம் சூடு பிடித்துள்ளது.

modi -twitter

பிரதமர் மோடி வாழ்த்து

இந்நிலையில், பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், வெற்றியின் அடையாளமான விஜயதசமி நாளில் மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த மங்களகரமான தருணத்தில் அனைவரது வாழ்வில் தைரியம், நிதானம், நேர்மறை ஆற்றலை கொண்டு வர வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.