தமிழகம் முழுவதும் விஜயதசமி விழா கோலகல கொண்டாட்டம்
தமிழகம் முழுவதும் விஜயதசமி பண்டிகையை அடுத்து பள்ளிகளில் குழந்தைகளுக்கு நெல்மணிகளில் எழுத்துக்கள் எழுதி கல்வியை தொடங்கியுள்ளனர்.
குழந்தைகளை பள்ளியில் சேர்த்த பெற்றோர்
ஆயுத பூஜை,சரஸ்வதி பூஜையை தொடர்ந்து இன்று விஜயதசமி முன்னிட்டு தமிழகம் முழுவதும் புதியதாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் நெல்மணிகளில் எழுத்துக்களை எழுதி கல்வியை தொடங்கினர்.
அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அருகே உள்ள தனியார் பள்ளியில் விஜயதசமி முன்னிட்டு புதியதாக பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கியும் சால்வை அணிவித்தும் பள்ளியின் தாளாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்பு அளித்து பின்பு நெல்மணிகளில் எழுத்துக்களை எழுதி தங்கள் கல்வியை தொடங்கினர்.
ஏராளமான குழந்தைகள் ஆர்வமுடன் சேர்க்கைக்கு வந்திருந்த நிலையில் பள்ளியின் நிர்வாக இயக்குனர் சஞ்சீவி ஜெயராம் தலைமையில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் இனிதே வரவேற்று முதல் கல்வியை தொடங்கினர்.
அதே போல சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்துார் உள்ளிட்ட பல இடங்களில் குழந்தைகளை பெற்றோர் கல்வி நிலையங்களில் சேர்த்தனர்.