விஜயபாஸ்கர் சொத்துக்கள் ஏன் முடக்கம்? : வருமான வரித்துறை விளக்கம்

By Irumporai Dec 01, 2022 12:51 PM GMT
Report

வருமான வரித்துறை பதில் மனுவுக்கு பதில் அளிக்க விஜயபாஸ்கர் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 வருமான வரித்துறை விளக்கம்

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துக்கள் முடக்கப்பட்டது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை விளக்கமளித்துள்ளது.

அதாவது, முன்னாள் அமச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த வழக்கில், பதில் மனுவை தாக்கல் செய்தது வருமான வரித்துறை.

வருமான வரித்துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், அரசு நிதி செலுத்தப்பட்ட வங்கி கணக்கில் இருந்து தொகுதி செலவுக்காக பணம் எடுக்கப்படவில்லை.   

வரி பாக்கியில் 20%-ஐ மட்டும் செலுத்தும்படி கடிதம் அனுப்பியும் விஜயபாஸ்கர் செலுத்தவில்லை. வரி பாக்கியில் 20%-ஐ மட்டும் செலுத்ததால் விஜயபாஸ்கரின் சொத்துக்கள், வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

வரி வசூல் மேல்முறையீட்டு நடவடிக்கை நிலுவையில் உள்ளதால் சொத்துக்களை விற்பதை தடுக்க சொத்துக்கள் முடக்கப்பட்டது. 

விஜயபாஸ்கர் சொத்துக்கள் ஏன் முடக்கம்? : வருமான வரித்துறை விளக்கம் | Vijayabaskars Asset Explanation Of Income Tax

ரூ.206 கோடி வருமான வரி பாக்கிக்காக விஜயபாஸ்கரின் 117 ஏக்கர் நிலம், 4 வங்கி கணக்குகளை வருமான வரித்துறை முடக்கப்பட்டுள்ளது.

இந்த ரூ.206 கோடி வருமான வரி பாக்கியில் ரூ.41.2 கோடியை செலுத்தும்படி விஜயபாஸ்கருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருப்பினும், அவர் காலம் தாழ்த்தி வருகிறார்.  

வழக்கு ஒத்திவைப்பு

மேல்முறையீட்டு நடவடிக்கையை தாமதப்படுத்த முயற்சிப்பதால் விஜயபாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வருமான வரித்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் விளக்கமளித்துள்ளது.

வருமான வரித்துறை பதில் மனுவுக்கு பதில் அளிக்க விஜயபாஸ்கர் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, விஜயபாஸ்கர் தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து.