சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அமைச்சர் விஜயபாஸ்கர்: ஏன் தெரியுமா?

court vijayabaskar
By Irumporai Apr 23, 2021 09:35 AM GMT
Report

கரூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போது கொரோனா தடுப்பு விதிகள் முழுமையாக பின்பற்றும் வகையில் தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கரூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றும் வகையில் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவிடக் கோரி, தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் தொகுதி அதிமுக வேட்பாளருமான விஜயபாஸ்கர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், வேலாயுதம்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதாகவும்.

 கொரோனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில், 77 வேட்பாளர்களின் முகவர்களையும் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கும்போது தனி மனித விலகல் பின்பற்ற முடியாத நிலை ஏற்படும் 

ஆகவே குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் முகவர்களை அனுமதிக்க வேண்டும், எனவும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என அமைச்சர் விஜய பாஸ்கர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு இந்த  வழக்கை திங்கள் கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.