மக்களிடையே அழுத திமுக வேட்பாளரை கலாய்த்த விஜயபாஸ்கர்!
ஏப்ரல் 6ம் தேதி தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டிட உள்ளார். இவரை எதிர்த்து திமுக சார்பில் தென்னலூர் பழனியப்பனை களமிறங்கி உள்ளார். இருவருமே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். ப
ழனியப்பன் பிரச்சாரத்தின் போது, விஜயபாஸ்கர் பணத்தை நம்பி போட்டியிடுகிறார். நான் மக்களையே நம்பி போட்டியிடுகிறேன். வாழ்வோ சாவோ எல்லாம் மக்களோடு தான். விஜயபாஸ்கருக்கு எல்லாரும் இருக்காங்க. எனக்கு நீங்க மட்டும் தான் இருக்கீங்க என கதறி அழுதார்.

இதனை அமைச்சர் விஜயபாஸ்கர் விமர்சித்து செய்துள்ளார். விராலிமலையில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய அவர், “சிலர் அப்படி தான் கிளிசிரின் போட்டுக் கொண்டு அழுவது போல நடிப்பார்கள். அதெல்லாம் யாரும் நம்பாதீங்க. இந்த தொகுதிக்காக உழைத்து ஓடா தேய்ந்து உள்ளேன்.
இந்த எம்.எல்.ஏ பதவியை நீங்கள் நினைத்தால் தான் கொடுக்க முடியும். உங்க கிட்ட அழக்கூடாது. அது நன்றாக இருக்காது. எனக்கும் உடம்புல பிரச்சினையெல்லாம் உள்ளது. இருந்தாலும் எனக்கு மனதில் வெறி அதிமாக இருக்கிறது” என்றார்.