முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கார் மீது தாக்குதல்!
Tamil nadu
AIADMK
By Sumathi
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
திண்டுக்கல், வேடசந்தூர் அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்த விசாரணையில் கரூர் ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட
திருவிக என்பவரை கடத்திச் செய்வதற்காக கார் கண்னாடி உடைத்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிகழ்விடத்திற்கு வந்த வேடசந்துார் காவல்துறையினர் எம்.ஆர். விஜயபாஸ்கரிடம் என்ன நடந்தது என்பதை கேட்டறிந்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் அமைச்சரின் கார் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.