வெற்றியின் அருகில் உள்ளோம் - விஜய் வெளியிட்டுள்ள பதிவு

Vijay
By Karthikraja May 08, 2026 08:04 AM GMT
Report

வெற்றியின் அருகில்தான் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என விஜய் தெரிவித்துள்ளார்.

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. 

வெற்றியின் அருகில் உள்ளோம் - விஜய் வெளியிட்டுள்ள பதிவு | Vijay Wishes Students For 12Th Exam Result

தமிழ்நாடு முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதியிருந்தனர். மொத்தமாக 7.53 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 95.20% ஆகும். இதில் மாணவர்கள் 93.19% பேரும், மாணவிகள் 97% பேரும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். 

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது - எப்படி தெரிந்து கொள்வது?

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது - எப்படி தெரிந்து கொள்வது?

தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விஜய் வாழ்த்து

தவெக தலைவர் விஜய்யும் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

வெற்றியின் அருகில் உள்ளோம் - விஜய் வெளியிட்டுள்ள பதிவு | Vijay Wishes Students For 12Th Exam Result

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில், விடாமுயற்சியால் வெற்றிக் கனியைச் சுவைத்த என் அன்புத் தம்பி, தங்கைகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! இந்த வெற்றி, உங்கள் கடின உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம். 

உயர்கல்வி எனும் அடுத்த கட்டத்தை நோக்கி, நம்பிக்கையுடன் அடி எடுத்து வையுங்கள். அதே நேரத்தில், வெற்றி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம்.

மீண்டும் முயற்சி செய்யுங்கள். வெற்றியின் அருகில்தான் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் அனைவரின் எதிர்காலமும் பிரகாசிக்கட்டும்! நல்லதே நடக்கும்!வெற்றி நிச்சயம்!" என தெரிவித்துள்ளார்.