ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டம்: தவெக தலைவர் விஜய் வாழ்த்து
Easter
By Fathima
இன்று ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வருகின்றன.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.
இன்று தேவாலயங்களில் நள்ளிரவில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.
இந்நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள ஈஸ்டர் வாழ்த்து செய்தியில், அன்பு, கருணை, மனிதநேயம், சகோதரத்துவம், தியாகம் ஆகியவற்றை மனித குலத்துக்கு போதித்தவர் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளாக ஈஸ்டர் திருநாளை உவகையுடன் கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.