விஜய் தான் தமிழ்நாட்டை ஆள்வார்: செங்கோட்டையன்
கருத்துகணிப்பு முடிவுகள்
தமிழக வெற்றி கழகத்தின் விஜய் தான் தமிழ்நாட்டை ஆள்வார் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெறுகிறது.
நேற்று வெளியான கருத்துக்கணிப்பின்படி, திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என கூறப்பட்டுள்ளது.
ஒருசில நிறுவன கருத்துக்கணிப்புகளை தவிர்த்து பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் திமுக-வுக்கு சாதகமாகவே அமைந்துள்ளன.
விஜய் தமிழ்நாட்டை ஆள்வார்
இந்நிலையில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்த போது, கருத்துக்கணிப்புக்கும் வெற்றிக்கும் சம்மந்தமில்லை, இலங்கையிலும் நேபாளத்திலும் வங்கதேசத்திலும் பஞ்சாபிலும் கருத்துக்கணிப்புகளுக்கு பின்னர் மாற்றங்கள் நடந்துள்ளன.
விஜய்யின் விசில் புரட்சி தான் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகளவில் தெரியப்போகிறது, 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று விஜய் தமிழ்நாட்டை ஆள்வார் என தெரிவித்துள்ளார்.
