விஜய் ஒரு துரோகி: முன்னாள் மேனேஜர் பரபரப்பு பேட்டி
விஜய் ஒரு துரோகி, தேர்தலில் தோற்றுவிட்டால் வெளிநாட்டுக்கு சென்றுவிடுவார் என விஜய்யின் மேலாளராக பணியாற்றிய பிடி செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
புலி திரைப்படத்தை தயாரித்த பிடி செல்வகுமார், போக்கிரி, வேட்டைக்காரன் உள்ளிட்ட பல படங்களுக்கு பிஆர்ஓ வாக பணியாற்றியுள்ளார்.
27 ஆண்டுகளாக விஜய்க்கு நெருக்கமான நபராக இருந்து வந்த பிடி செல்வகுமார் தனிப்பட்ட காரணங்களால் அவரிடமிருந்து விலகினார்.

தொடர்ந்து கலப்பை மக்கள் இயக்கம் என்ற அமைப்பை தொடங்கியவர் தற்போது திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
இவருக்கு மாநில திமுக வர்த்தகர் அணி துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது, மேலும் வருகிற சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட இவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த போது, திமுக கட்சி தலைமை முடிவு செய்தால் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுவேன், விஜய் யாரை நிறுத்தினாலும் அவருக்கு எதிராக களமிறங்கி பணியாற்றுவேன்.
கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த செய்தியை கேட்டதும் தப்பி சென்றவர், தேர்தலில் தோற்றுபோனால் வெளிநாட்டுக்கே சென்றுவிடுவார்.
விஜய்க்கு இருப்பது ரசிகர்களின் ஓட்டு தான், அது தேர்தலில் எடுபடாது, விஜய் ஒரு துரோகி, விஜய்யை நம்பி தேர்தலில் பணத்தை செலவு செய்ய வேண்டாம். அவருக்கு தோல்வி பிடிக்காது,
தோற்றுப்போன படத்தின் தயாரிப்பாளர் வந்தால்கூட சந்திக்க மாட்டார் என பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
