ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர்! மாணிக்கம் தாகூர்

Rahul Gandhi
By Fathima Sep 11, 2026 08:26 AM GMT
Report

சமத்துவ போராளி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளையொட்டி பரமக்குடியில் இன்று அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் மரியாதை செலுத்தினார்.

இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாடு காங்கிரஸை பொறுத்தவரை ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர்.

இதனை அனைவருமே ஒத்துக்கொள்வார்கள், அதற்கான காலம் வரும்போது வெளிப்படையாக அறிவிப்பார்கள்.

தேசிய அளவில் இந்தியா கூட்டணியாகவும், தமிழ்நாடு அளவில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக்கூட்டணியாகவும் செயல்படுவோம்.

2029ம் ஆண்டு தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும், தமிழ்நாட்டில் 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெறுவோம், ஒவ்வொரு வேட்பாளர்களுக்காகவும் முதலமைச்சர் விஜய் பிரசாரம் செய்வார் என தெரிவித்தார்.