விரைவில் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் சங்கீதா?
சட்டப்பேரவை தேர்தலுக்கான வேளையில் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் ஈடுபட்டு வரும் சூழலில் பேரிடியாக அமைந்துள்ளது விஜய்யின் விவாகரத்து செய்தி.
1998ம் ஆண்டு இலங்கை தமிழ் பெண்ணான சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் விஜய்.
இவர்களுக்கு ஜேசன் சஞ்சய், திவ்யா என இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார் சங்கீதா.

இதற்கு நடிகையுடனான தொடர்பே காரணம் என்றும், 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாகவே விஜய்யின் சினிமா தொடர்பான நிகழ்வுகளில் தலைகாட்டாமல் இருந்த சங்கீதா.
அப்போதே கிசுகிசுக்கள் பரவிய நிலையில், மனுத்தாக்கல் மூலம் அது உண்மையாகியுள்ளது.
தற்போது இந்த வழக்கு குடும்பநல நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு, ஏப்ரல் 20ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது, விஜய் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சங்கீதாவுக்காக மும்பை வழக்கறிஞர் ஒருவரும், சென்னையை சேர்ந்த இரு வழக்கறிஞர்களும் ஆஜராகவுள்ளனர்.
இதற்கிடையே விஜய்க்கு ஆதரவாக சமூகவலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் பதிவிட்டு வரும் சூழலில், இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக விரைவில் பத்திரிக்கையாளர் சந்திப்பை சங்கீதா நடத்தலாம் என கூறப்படுகிறது.

இஸ்ரேலுக்கு பேரழிவை ஏற்படுத்தும் ஈரான் ஏவுகணைகள் : பலர் உயிரிழப்பு : உருக்குலைந்த குடியிருப்புகள் IBC Tamil