234 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கும் விஜய்! விசில் அடிக்குமா?
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் விசில் சின்னத்தை களமிறக்க தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனித்து போட்டி
எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி வைத்துக்கொள்ளாமல் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட அதாவது விசில் சின்னத்தை களமிறக்க தவெக தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல் தேர்தலிலேயே தங்களது பலத்தை காட்ட திட்டமிட்டுள்ளார்களாம், இதற்காக தொகுதி வாரியாக வேட்பாளர்களை இறுதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
அடுத்த கட்ட பிரசார உத்திகள் பற்றியும், தொகுதியில் செல்வாக்கு மிகுந்த நபர்கள் யார்? தொகுதியில் உள்ள பிரச்சனைகள் என்னென்ன? என்பது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மூன்றாம் ஆண்டு தொடக்கவிழா
இதற்கிடையே பிப்ரவரி 2ம் திகதி தவெக கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா நடைபெறவிருக்கிறது.
இதனை சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளார்களாம், விழாவின் போது முதற்கட்ட வேட்பாளர்கள் குறித்து தகவல்களை வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
இதற்காக தொகுதி வாரியாக மூன்று பேர் கொண்ட பட்டியல் தயாராகி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
எனினும் சரியான வேட்பாளரை தெரிவு செய்ய காலதாமதம் ஆகலாம் என தெரிகிறது.
