நெல்லை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 'நடிகர் விஜய்' நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்!
நெல்லையில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் நடிகர் விஜய்.
வெள்ள பாதிப்பு
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் கடந்த 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை அதி கனமழை பெய்தது.
இதனால் அம்மாவட்டங்களில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் வீடுகள், சாலைகள், பல்வேறு கட்டமைப்புகள் சேதங்களும், ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ளத்தில் இறந்து போன்ற துயரங்கள் ஏற்பட்டன.
நடிகர் விஜய் உதவி
இதனையடுத்து தமிழக அரசு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை வழங்கி வருகிறது. இந்நிலையில், திருநெல்வேலியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத் திட்ட உதவிகளை நடிகர் விஜய் வழங்கவுள்ளார்.
திருநெல்வேலியில் உள்ள கே.டி.சி நகரில் நடக்கும் நிகழ்ச்சியில் நலத் திட்ட உதவிகளை அவர் பங்கேற்று நல திட்ட உதவிகளை வழங்குகிறார்.