‘என்னால விஜய் அவங்க அப்பாக்கிட்ட திட்டு வாங்குனாரு’ - பழைய நினைவுகளை பகிர்ந்த பிரபல நடிகை
90-களில் தமிழ் சினிமாவில் விஜய் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சங்கவி. இவர் நடிகர் விஜய்யுடன் பல படங்களில் ஒன்றாக நடித்துள்ளார்.
இந்நிலையில் விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டியில் மனம் திறந்துள்ளார் சங்கவி.
“விஜய் எப்போதுமே அமைதியான ஒரு மனிதர். அவர் தனிமையில்தான் அதிக நேரம் செலவிடுவார். அவருடைய நண்பர்களுடன் பயங்கர ஜாலியா இருப்பார். ஆனால் வெளியில் அதிகம் பேசமாட்டார். ஆனால் பேசினால் அதில் நல்ல அர்த்தமாக இருக்கும். ஷூட்டிங்கில் இருக்கும்போது கூட அவர் யாருடனும் போய் பேசமாட்டார்.
அமைதியாக ஒரு இடத்தில் உட்கார்ந்து யார் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று கவனித்துக் கொண்டிருப்பார். விஜய் இந்த நிலைக்கு வந்திருக்கிறார் என்றால் அதுக்கு காரணம் அவரது கடின உழைப்புதான்.
ரசிகன் திரைப்படம் எடுத்த சமயத்தில் எல்லோரும் உட்கார்ந்து கார்ட்ஸ் விளையாடுவோம்.அவங்க அப்பாதான் இயக்குநர். அவருக்கு தெரியாம , அசிஸ்டெண்டையெல்லாம் நிற்க வச்சுட்டு எல்லாரும் கார்ட்ஸ் விளையாடுவாங்க. அதேபோல ஹோட்டல் ரூம்க்கு போறதுன்னு போட்டி வச்சு போவோம்.
குழந்தை தனமா விளையாடுவோம். விஜய் ஒரு சிறந்த டான்ஸர். விஷ்ணு படத்திற்காக மூனார் போயிருந்தோம். தண்ணீர் செம ஜில்லுனு இருந்துச்சு. அப்போ எஸ்.ஏ.சி சார் திட்டுவாருன்னு நான் தண்ணீரில் இறங்கிட்டேன்.
விஜய் ரொம்ப ஜில்லுனு இருக்குனு தயங்கிட்டு இருந்தாரு. அப்போ அவர் அப்பா, அந்த பொண்ணே இறங்கிடுச்சு உனக்கு என்ன அப்படினு திட்டுனாங்க. அதன் பிறகு விஜய் என்னை முறைச்சு பார்த்தாரு. உன்னை யார் முதல்ல இறங்க சொன்னது, உன்னால எனக்கு திட்டுங்குற மாதிரி அது எனக்கு மறக்க முடியாத நினைவு“ என்கிறார் சங்கவி.