விவேக் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் விஜய்
மறைந்த சின்ன கலைவாணர் விவேக் வீட்டுக்கு சென்று நடிகர் விஜய் ஆறுதல் கூறியுள்ளார்.
பிரபல நகைச்சுவை நடிகரும், சமூக ஆர்வலருமான நடிகர் விவேக் கடந்த 17ம் தேதி காலமானார், அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
விவேக் மறைவின் போது, வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய் நேற்று தமிழகம் திரும்பினார், அவர் விமான நிலையத்திலிருந்து வெளியில் வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகின.
இந்நிலையில் இன்று காலை விவேக் வீட்டுக்கு சென்ற விஜய் அஞ்சலி செலுத்தியதுடன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
தமிழன், குஷி, யூத், பத்ரி, பிரியமானவள், நேருக்கு நேர், திருமலை என ஏராளமான படங்களில் விவேக்குடன், விஜய் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.