பொன்.ராதாகிருஷ்ணனை தோற்கடிப்பாரா விஜய் வசந்த்? தொடர்ந்து முன்னிலையில் - டுவிட்டரில் உருக்கம்

vijay vasanth
By Fathima May 02, 2021 04:46 AM GMT
Report

கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட விஜய் வசந்த் முன்னிலை வகித்து வருகிறார்.

கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வசந்தகுமார், கொரோனாவால் உயிரிழந்ததை தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 6ம் தேதி அத்தொகுதி இடைத்தேர்தல் நடந்தது.

இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த வசந்தகுமார் அவர்களின் மகன் விஜய் வசந்த், பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டனர்.

தற்போது கன்னியாகுமரி மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜய் வசந்த் முன்னிலையில் உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடும் 9-வது நாடாளுமன்றத் தேர்தல் இதுவாகும். இதற்கு முன்பு எட்டு முறை போட்டியிட்ட அவர் இரண்டு முறை மட்டுமே வெற்றிபெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.