எப்போ கல்யாணம்? அம்மா கேட்டுக்கிட்டே இருக்காங்க - வெட்கத்தில் தமன்னா காதலர்!
திருமணம் குறித்து அம்மா கேட்டுக்கொண்டே இருப்பதாக தமன்னாவின் காதலர் தெரிவித்துள்ளார்.
நடிகை தமன்னா
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தமன்னா. தமிழ் சினிமாவின் டாப் நடிர்களான அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார். தொடர்ந்து ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என ஹாட்டான வெப்சீரிஸ்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலரில் களமிறங்கியிருக்கிறார். இந்நிலையில், தமன்னா, நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதை உறுதி செய்தார். விஜய் வர்மாவும் நான் தமன்னாவை காதலிக்கிறேன்.
திருமணம்?
ஆம், நான் அவளை மகிழ்ச்சியாகவும், வெறித்தனமாகவும் காதலிக்கிறேன் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், திருமண விவகார பேச்சு ஏற்கனவே துவங்கி, அடங்கிவிட்டது. நான் திருமண வயதை தாண்டிவிட்டதால் அந்த பேச்சு அடங்கியது.
என் அம்மா இன்னும் திருமணம் பற்றி கேட்டுக் கொண்டே இருக்கிறார். ஒவ்வொரு முறை போன் செய்யும்போதும் கல்யாணம் பற்றி பேசுவார். நான் அதற்கு பதில் அளிக்காமல் பேச்சை மாற்றிவிடுவேன் என விஜய் வர்மா தெரிவித்துள்ளார்.