‘வாரிசு’ வெற்றி தொடர்ந்து மீண்டும் வம்சி இயக்கத்தில் விஜய்...? - வெளியான தகவல்..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கடந்த மாதம் 11ம் தேதி ‘வாரிசு’ திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வசூல் சாதனையிலும் முன்னிலையில் உள்ளது.
விஜய்யின் ‘தளபதி - 67’
‘வாரிசு’ படத்திற்கு பிறகு நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 67’ படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் யார், யார் நடிக்கிறார்கள் என்பது குறித்த தகவலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இப்படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
மேலும், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா இடம்பெற்றுள்ளார். விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படத்தில் அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், கவுதம் மேனன் உள்பட பலர் நடிக்கின்றனர். கத்தி, பீஸ்ட் படங்களை தொடர்ந்து அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
சமீபத்தில் ‘தளபதி 67’ படத்தின் Title Reveal Promo வீடியோ படக்குழுவினர் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். இப்படத்தின் தலைப்பு ‘லியோ’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.இப்படம் வரும் அக்டோம்பர் 19ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் வம்சி இயக்கத்தில் விஜய்...?
தற்போது சமூகவலைத்தளங்களில் அடுத்த இரண்டு வருடங்களில் வம்சி பைடிப்பள்ளி-விஜய் கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாகப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 'லியோ' படத்தை தொடர்ந்து, அட்லீ இயக்கத்தில் 'தளபதி 68' படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தது. தற்போது வம்சி-விஜய் மீண்டும் இணைவதாக கூறப்படும் படம் 'தளபதி 69' அல்லது 'தளபதி 70' ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாரிசு திரைப்படம் ரூ.300 கோடியைத் தாண்டி வசூலில் சாதனைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.