‘ரஞ்சிதமே’ பாட்டுக்கு கர்ப்பிணி வயிற்றில் இருந்த குழந்தை நடனம்... - வைரலாகும் சூப்பர் வீடியோ...!
விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள ‘ரஞ்சிதமே’ பாட்டுக்கு கர்ப்பிணி வயிற்றில் இருந்த குழந்தை நடனமாடிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
‘வாரிசு’ படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் நடிப்பில் வெளியாகும் படங்களின் முதல் சிங்கிள் பாடல் ரசிகர்களைக் கவர்ந்துவிட்டால் அவை யூ-டியூப்பில் பெரிய சாதனையைப் படைத்து விடும். இவர் பாடலுக்கென்று ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது.
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள 'வாரிசு' படத்தின் முதல் சிங்கிளாக வெளியான 'ரஞ்சிதமே' பாடல் வெளியாகி 24 மணி நேரத்தில் 18.5 மில்லியன் பார்வைகளையும், 1.3 மில்லியன் லைக்குகளை கடந்து சாதனை படைத்தது.
கடந்த 11ம் தேதி வாரிசு திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வசூல் சாதனையிலும் முன்னிலையில் உள்ளது.
கர்ப்பிணி வயிற்றில் இருந்த குழந்தை நடனம்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், தாயின் வற்றில் இருந்த குழந்தை நடிகர் விஜய்யின் ‘ரஞ்சிதமே’ பாட்டு ஒலித்தவுடன் வயிற்றில் சுற்றி சுற்றி நடனமாடியுள்ளது. தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே ஆச்சரியத்தில் மூழ்கி... போடு.. அப்படித்தான்... நம்ம தளபதி பாட்டுன்னா சும்மாவா... என்று குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Such a divine feel How Cute this is
— thaman S (@MusicThaman) January 14, 2023
made my day ?❤️ #Ranjithame ??? https://t.co/3eRNztekDP