விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல் - ‘வாரிசு’ பட செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு - குஷியில் ரசிகர்கள்
தளபதி விஜய் பிறந்தநாள்
இன்று தளபதி விஜய்யின் 48வது பிறந்த நாளை ரசிகர் ஆர்வத்துடனும், உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள். பல்வேறு சினிமாத்துறையினர் நடிகர் விஜய்க்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
போஸ்டர் வெளியீடு
இந்நிலையில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வாரிசு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை வெளியானது. இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளளது. இன்று விஜய் பிறந்தநாளையொட்டி ‘வாரிசு’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் துள்ளிகுதித்துள்ளனர். தற்போது இந்த போஸ்டர் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் போஸ்டரைப் பார்த்த பலர் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.
#VarisuSecondLook pic.twitter.com/q1TZeuU9LW
— Vijay (@actorvijay) June 22, 2022