‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு...! - குஷியில் ரசிகர்கள்

Vijay Varisu
By Nandhini Nov 11, 2022 07:47 AM GMT
Report

விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழா தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

‘வாரிசு’ படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் நடிப்பில் வெளியாகும் படங்களின் முதல் சிங்கிள் பாடல் ரசிகர்களைக் கவர்ந்துவிட்டால் அவை யூ-டியூப்பில் பெரிய சாதனையைப் படைத்து விடும்.

இவர் பாடலுக்கென்று ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. அவருடைய முந்தைய பட பாடல்களின் சாதனைகளை எப்படியும் லேட்டஸ்ட்டாக வெளியாகும் பாடல்கள் முறியடித்துவிடும்.

'ரஞ்சிதமே' பாடல்

சமீபத்தில் 'வாரிசு' படத்தின் முதல் சிங்கிளாக  'ரஞ்சிதமே' பாடல் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

இதற்கு முன் வெளியான 'பீஸ்ட்' படத்தின் முதல் சிங்கிளான 'அரபிக் குத்து' பாடல் 24 மணி நேரத்தில் 23.7 மில்லியன் பார்வைகளையும், 2.2 மில்லியன் லைக்குகளையும் பெற்று சாதனை படைத்தது.

இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு

இந்நிலையில், நடிகர் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 24ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.       

vijay-varisu-movie-date-songs-realse