‘வாரிசு’ படத்தில் காட்டப்பட்ட பிரம்மாண்ட வீடு.. - அதன் மதிப்பு இத்தனை கோடியா? வாயடைத்த ரசிகர்கள்...!

Vijay Tamil Cinema Varisu
By Nandhini 1 மாதம் முன்

‘வாரிசு’ படத்தில் காட்டப்பட்ட பிரம்மாண்ட வீடு மற்றும் அது யாருடையது என்பது குறித்த தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

‘வாரிசு’ படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கடந்த 11ம் தேதி வம்சி இயக்கத்தில், தில் ராஜூ தயாரிப்பில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘வாரிசு’.

இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், சியாம், சங்கீதா உட்பட பலர் நடித்திருந்தனர். இப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியிடப்பட்டது. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வசூல் சாதனையிலும் முன்னிலையில் உள்ளது.

vijay-varisu-movie-a-huge-house-worth-crores

‘வாரிசு’ படத்தின் பிரம்மாண்ட வீடு

இப்படம் பிரம்மாண்டமாக இருந்ததோ இல்லையோ, இந்தப் படத்தில் விஜய்யின் குடும்பங்கள் தங்கியிருந்த வீடு மிகப் பிரம்மாண்டமாகவே இருந்தது. இது ரசிகர்களை வாயடைக்க வைத்தது. என்னடா இப்படி ஒரு பிரமாண்டமான வீடு... இது யார் வீடு.. என்று வியந்து பார்த்தனர்.

வெளிவாசலிலிருந்து வீட்டிற்குள் போவதற்கு ஒரு கால் டாக்‌ஷி புக் பண்ணித்தான் போகனும் போல அந்தளவுக்கு மிகப்பிரம்மாண்டமாக கட்டியிருந்திருந்தனர்.

இந்த இந்த பிரமாண்டமான வீட்டைப் பற்றி சில தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த பிரமாண்ட வீடு உண்மையான வீடு கிடையாதாம். அது செட் தானாம்.

இந்த செட் வீட்டை கட்ட சுமார் ரூ.8 கோடி செலவாதனாம். மேலும் வீட்டிற்குள் அமைந்திருந்த ஃபர்னிச்சர்ஸ் எல்லாமே புதியதாக வாங்கப்பட்டதாம். இதற்கே படக்குழுவினர் பல கோடியை செலவு செய்துள்ளனர்.

அந்த செட் வீடு இருந்த இடம் தில் ராஜுவின் இடமாம். அவருக்கு சொந்தமான இடத்தில் தான் அந்த பிரம்மாண்ட செட்டை படக்குழுவினர் அமைத்துள்ளனர்.

தற்போது இது குறித்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் 10 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த அளவுக்கு செட் போட்டு அமைந்த படக்குழுவினர் கதையில் கொஞ்சம் உஷாராக இருந்திருக்கலாம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.