இதுக்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை : வாரிசு சர்ச்சையினை முடித்து வைத்த ஓட்டோ

Vijay Viral Photos Varisu
1 மாதம் முன்

தெலுங்கில் முன்னணி இயக்குநராகவும், தமிழில் தோழா படத்தை இயக்கியதன் மூலமாகவும் பிரபலமான இயக்குநர் வம்சி, தற்போது விஜயின் 66 ஆவது இடத்தை இயக்கி வருகிறார்.

வெளியான வாரிசு போஸ்டர்

பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வரும் இந்தப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டன. இதில் முதலாவதாக வெளியிடப்பட்ட போஸ்டரில் விஜய் கோர்ட் சூட் அணிந்து கொண்டு தோற்றம் அளித்தார்.

இதுக்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை :  வாரிசு சர்ச்சையினை  முடித்து வைத்த ஓட்டோ | Vijay Varisu First Look Poster Otto Statement

சர்ச்சையான போஸ்டர்

இந்த நிலையில் இந்த போஸ்டர் துல்கர் சல்மான் நடித்த ஓட்டோ நிறுவனத்தின் விளம்பர போஸ்டர் இருக்கிறது என்று கூறி, வாரிசு படத்தின் போஸ்டரில் விஜய்க்கு பதிலாக துல்கர் சல்மானை புகைப்படத்தை மாற்றி போட்டோ ஷாப் செய்து நெட்டிசன்கள் வெளியிட்டனர்.

இந்த நிலையில், அதற்கு தற்போது ஓட்டோ நிறுவனம் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஓட்டோ நிறுவனம் வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில், இது ஓட்டோ நிறுவனம் சார்பில் இருந்து வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு :

ஓட்டோ நிறுவனம் உண்மைத்தன்மைக்கு தன்னை ஒப்படைத்துள்ளது. அறிவு சார் சொத்துரிமை மீறலை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. மேலே பதிவிடப்பட்டுள்ள போட்டோக்கும் ஓட்டோவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

இதுக்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை :  வாரிசு சர்ச்சையினை  முடித்து வைத்த ஓட்டோ | Vijay Varisu First Look Poster Otto Statement

விளக்கம் கொடுத்த  ஓட்டோ

இது பொழுதுபோக்கிற்காக மீம் கிரியேட்டர்களால் உருவாக்கப்பட்டது. எங்களது வாழ்த்துகளை வாரிசு படக்குழுவிற்கு தெரிவித்துக்கொள்கிறோம் என்று பதிவிட்டுள்ளது.  

இதன் மூலம் மீம் கிரியேட்டர்கள் வாரிசு படத்தின் போஸ்டர்  துல்கர் சல்மான் நடித்த ஓட்டோ நிறுவனத்தின் விளம்பர போஸ்டர் என்று கூறி வந்த நிலையில் தற்போது ஓட்டோ நிறுவனம் விளக்கமளித்துள்ளது விஜய் ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.

குடும்பத்தின் முதல் வாரிசு..கையில் குழந்தையுடன் விஜய் டிவி பிரியங்கா..!

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.