நெஞ்சில் குடியிருக்கும்... வைரலாகும் விஜய்யின் செல்ஃபி வீடியோ

Vijay Varisu
By Irumporai Dec 24, 2022 07:45 PM GMT
Report

 வாரிசு பட ஆடியோலான்ச் விழாவில் விஜய் எடுத்த செல்பி வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

 வாரிசு ஆடியோ லான்ச்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

விஜய் குட்டி ஸ்டோரி 

இந்த விழாவில் பேசிய விஜய் விஜய் மக்கள் இயக்கத்தினர் கொடுக்கிற ரத்த தானத்தை பத்தி சொல்லியே ஆகணும்... ரத்தத்துக்கு ஜாதி, மதம், இனமெல்லாம் தெரியாது... இதுதான் ரத்தத்துகிட்டயிருந்து நம்ம கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம். தேவையான விமர்சனமும்... தேவையற்ற எதிர்ப்பும் தான் நம்மை ஓட வைக்கும் எனக் கூறி தனது ரசிகர்களுக்கு குட்டி ஸ்டோரி கூறினார்.

வைரலாகும் செல்பி வீடியோ 

பின்னர் ரசிகர்களுடன் செல்ஃபி வீடியோ எடுத்துக்கொண்ட விஜய் அதனை தனது மேனேஜர் ஜெகதீஷை அழைத்து நெஞ்சில் குடியிருக்கும் என்ற ஹேஷ்டேக்குடன் ட்விட்டரில் பதிவிட சொன்னார். தற்போது ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் வீடியோவை ரசிகர்கள் ரீ ட்வீட் செய்துவருகிறார்கள்.